வயநாடு நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 276 ஆக உயர்வு.. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரம்

Siva

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (07:01 IST)
சமீபத்தில் வயநாடு அருகே உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று  மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் இன்று காலை முதல் மீண்டும் மீட்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 240 பேர் விவரங்கள் தெரியவில்லை என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அடுத்தடுத்து நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்