இங்க இருந்த ஒரு மலையையே காணோம்.. வயநாடு உள்ளூர்வாசியின் அதிர்ச்சி பேட்டி..!

Mahendran

புதன், 31 ஜூலை 2024 (14:28 IST)
வயநாடு பகுதியில் உள்ளூர்வாசி ஒருவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இங்கே ஒரு மலை இருந்தது, அதன் அருகே தேயிலை தோட்டம் இருந்தது, இப்போது மலையையும் காணவில்லை தேயிலை தோட்டத்தையும் காணவில்லை என்று கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வயநாடு பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பது தற்போது மீட்பு பணிகளின் போது தெரியவந்துள்ளது. மீட்கப்படும் உடல்களெல்லாம் பள்ளிவாசல் மற்றும் பள்ளிக்கூடங்களில் தான் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே மீட்புப் பணிகளில் ஈடுபட முடியும் என்றும் உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சில இடங்களில் உள்ள நபர்களை மீட்பதற்கே செல்ல முடியவில்லை என்றும் ஒரு ஆள் ஆழத்திற்கு சேறும் சகதியும் இருக்கிறது என்றும் பாக்கு மரத்தை மேலே போட்டு தான் அதன் மீது ஏறி ரிஸ்க் எடுத்து மீட்பு பணியை செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த பகுதியில் ஒரு மலை இருந்தது என்றும் அந்த மலை மிகவும் அழகாக பசுமையாக அழகாக இருக்கும் என்றும் அதன் கீழே தான் தேயிலை தோட்டம் இருந்தது என்றும் இப்போது மலையையும் காணவில்லை தேயிலை தோட்டத்தையும் காணவில்லை வெறும் தேயிலை தோட்டத்தின் வேர் மட்டுமே இருக்கிறது என்றும் அவர் அதிர்ச்சியுடன் குறிப்பிட்டார்.  இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்