கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கினோம்: மத்திய அமைச்சர் அமித்ஷா

Siva

புதன், 31 ஜூலை 2024 (16:04 IST)
கேரளாவில் கனமழை குறித்த எச்சரிக்கை 5 நாட்களுக்கு முன்பே வழங்கினோம் என்றும் அந்த எச்சரிக்கையை கவனமாக எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கனமழை பெய்யும் என்று ஐந்து நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தோம் என்றும் மத்திய அரசு வழங்கிய இந்த எச்சரிக்கையை கேரளா அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

ஏற்கனவே குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கினோம் என்றும் அந்த எச்சரிக்கையை குஜராத் அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

ஆனால் மத்திய அரசு வழங்கிய கனமழை எச்சரிக்கையை கேரளா அரசு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கனமழை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்காணித்து அங்கு உள்ள மக்களை வெளியேற்றி இருந்தால் இந்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்