ஸ்டேட்டுக்கே சிம்னாலும் பேரனுக்கு தாத்தா தான்: பினராயி விஜயனின் WFH அட்ராசிட்டி!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (11:38 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்துக்கொண்டிருக்கும் போது அவரது பேரன் குறுக்கிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

 
இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த போது கேரளாவில் அதிகளவிலான தொற்று காணப்பட்டது. ஆனால் அம்மாநில அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.  
 
கேரளாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5622 ஆக உள்ளது. 3,341 பேர் குணமடைந்துள்ளனர், 25-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இருப்பினும் கேரளாவில் அடுத்த ஆண்டு வரை லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வீட்டில் அலுவலகம் அமைத்து தினமும் மாலையில் ஆன்லைன் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில் பேட்டியளித்த போது அவரது பேரன் இஷான் குறுக்கிட்டு இடையூறு செய்கிறான். 
 
இது சமூக வலைத்தளங்களில் வைரலாக வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு இது போன்று இருக்கதானே செய்யும் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்