டீசல் விலை எதிரொலி: பேருந்து கட்டணத்தை உயர்ந்த அரசு முடிவு?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:13 IST)
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை தொடர்ந்து கர்நாடக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் தற்போது இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் கர்நாடக அரசு, பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அம்மாநில முதலமைச்சர் அனுமதி அளித்தால் மட்டுமே மாநகர பி.எம்.டி.சி பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தொலைத்தூர பேருந்துகளான கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்