15 வயது பெண்ணுடன் திருமணம்.. 40 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் வழக்கில் தீர்ப்பு..!

Siva
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (16:11 IST)
15 வயது பெண்ணை திருமணம் செய்ததாக 40 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த தீர்ப்பில் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ரபிக் ஷேக் என்பவர் கடந்த 1986 ஆம் ஆண்டு 15 வயதை பெண்ணை அழைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் தாயார் அளீத்த புகாரின் அடிப்படையில் 40 ஆண்டுகளாக ரபிக் ஷேக்கை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது தான் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்  ரபிக் ஷேக் மற்றும் அவரது மனைவிக்கு நான்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது போதிய ஆதாரங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் புகார் அளித்த பெண் இறந்து விட்டதாகவும் சாட்சியங்களும் இறந்து விட்டதாகவும் அதுமட்டுமின்றி  ரபிக் ஷேக் மனைவி தான் விருப்பத்துடன் தான் அவருடன் சென்றதாகவும் கூறப்பட்டதை அடுத்து  ரபிக் ஷேக் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்