11ஆம் வகுப்பில் சேருகிறார் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்: பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (20:25 IST)
11ஆம் வகுப்பில் சேருகிறார் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஒருவர் பதினோராம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஜார்கண்ட் மாநிலத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் ஜகர்நாத் மஹ்டோ. இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதால் அவரது துறை குறித்து கேள்விக்குள்ளானது. இதனை அடுத்து அவர் பதினொன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார் 
 
இதுகுறித்து ஜகர்நாத் மஹ்டோகூறுகையில் ’நான் பதினோராம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளேன் சேர்ந்து கடினமாக படிப்பேன். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதால் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்றது முதல் எனது திறன் கேள்விக்குள்ளானது. இதனால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். அதனால் 11 ஆம் வகுப்பில் தற்போது சேர்ந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் 
 
25 ஆண்டுகளுக்குப்பின் பள்ளிப் படிப்பை மீண்டும் தொடங்கும் அமைச்சர் ஒருவரால் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்