ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு அரசு வேலை! ஜெகன் மோகன் அதிரடி!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (13:32 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கி இருக்கிறார். 
 
ஆந்திர முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது ஒரே நாளில் ஒன்றே கால் லட்சம் நிரந்தர அரசு நியமித்துள்ளார். 
 
500 வகையான பொது சேவைகள் வழங்க புதிய நிர்வாக நடைமுறையாக, கிராம செயலகத்தையும், நகராட்சி தொடர்பான சேவைகளுக்காக நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் டிசம்பர் முதல் வாரத்தில் ஆந்திர அரசு செயல்படுத்துகிறது. 
இதற்காக கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 2,29,804 பேரில் 1,26,728 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதன் பின்னர் அவர் பேசியது பின்வருமாறு, 
 
ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டது, இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. ஒரே நேரத்தில் இவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதுடன், வெறும் இரண்டே மாதங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள சாதனை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும் என பெருமிதம் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்