#IsupportBabaRamdev: டிவிட்டரில் டிரெண்டாகும் ராம்தேவ்!

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (17:05 IST)
பாபா ராம்தேவுக்கு ஆதரவு தெரிவித்து #IsupportBabaRamdev என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 
 
சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது, அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் பின்பற்றுபவர்களை பற்றி நான் கவலை கொள்கின்றேன். அவர்களை கண்டு அஞ்சுகிறேன். மேலும் பெரியார் அறிவார்ந்த தீவிரவாதி.
 
ராமர், கிருஷ்ணர் காலம் முதல் முயற்சி உயர் ஜாதியினர் மட்டுமே ஆட்சி செய்து வந்ததாகவும் அதன் பிறகு ஆதிதிராவிட மக்களும் இஸ்லாமியர்களும் வந்தனர் என்று கூறிய பாபா ராம்தேவ், பெரியார் மக்களை தவறாக வழி நடத்தியதாகவும் விமர்சனம் செய்தார்.
 
யோகா குரு பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
இருப்பினும் அவருக்கு ஆதரவு தெரிவித்து காலை முதல் டிவிட்டரில் #IsupportBabaRamdev என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்