இஸ்ரேல் போர்; ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து!

ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (15:43 IST)
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் மூண்டுள்ள சூழலில் விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.



பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல ஆண்டு காலமாக மோதல் இருந்து வரும் நிலையில் நேற்று ஹமாஸ் அமைப்பினர் திடீரென 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இஸ்ரேலும் போரை அறிவித்ததுடன் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பு பகுதியான காசா பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான், சவுதி நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பை கண்டித்துள்ளன. இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில் அங்கு பல இந்தியர்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் போர் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி இந்தியாவிலிருந்து இஸ்ரேல் செல்லும் விமானங்களின் சேவைகளை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வாரத்திற்கு 5 விமானங்கள் இந்த பாதையில் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்