3.5 கிமீ, 295 பெட்டிகள்: இந்தியாவின் மிக நீளமான ரயில்!
3.5 கிலோ மீட்டர் நீளத்தில் 295 பெட்டிகளுடன் உள்ள இந்தியாவின் மிக நீளமான ரயில் இயக்கப்பட்டு இருக்கிறது. மத்திய ரயில்வே இந்த ரயிலை சோதனை செய்து பார்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஐந்து சரக்கு ரயில்களின் பெட்டிகள் ஒரே ரயிலில் இணைத்து அதாவது 295 பெட்டிகளுடன் ஒரே ரயிலாக நேற்று சூப்பர் வாசுகி என்ற ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கியது
20 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றுக்கொண்டு மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அந்த ரயில் காட்சியளித்தது. இந்திய ரயில்வே இயக்கிய அதிக அளவு நிலக்கரியை ஏற்றிச்செல்லும் மிக நீளமான ரயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இந்த ரயில் இயக்கப்பட்டது என்பதும் இந்த ரயிலை பலர் வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.