முடிவுக்கு வராத விவசாயிகள் போராட்டம்! – குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (18:02 IST)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குடியரசு தலைவரை நேரில் சந்திக்க உள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பந்த் நடைபெற்றது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்தும், வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் நாளை குடியரசு தலைவரை சந்திக்க உள்ளனர். அதன்படி காங்கிரஸிலிருந்து ராகுல் காந்தி, திமுகவிலிருந்து டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் ஆகியோர் நாளை மாலை 5 மணிக்கு குடியரசு தலைவரை சந்திக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்