’ஐயோ பாவம்’ - ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (08:48 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையன சுதாசிங், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் பங்கேற்றார்.


 


உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுதாசிங் பிரேசிலில் நாட்டில் இருந்தபோதே லேசான உடல்நிலை பாதிக்கப்பட்டார். போட்டி முடிந்து, நாடு திரும்பியதும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்த மாதிரியை சோதனை செய்ததில், அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது, உறுதி செய்யப்பட்டது. சுதாசிங்கை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கர்நாடகா மாநில சுகாதார குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்