உலக பொருளாதாரத்தில் இந்தியா ஏழாவது இடம்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:09 IST)
உலக வங்கி வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

உலகளாவிய சந்தை மதிப்பை (ஜிடிபி) அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் பொருளாதார பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது உலக வங்கி. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. 2.7 ட்ரில்லியன் ஜிடிபி மதிப்புடன் இந்தியா உலக பொருளாதார நாடுகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 20.5 ட்ரில்லியன் ஜிடிபி மதிப்புடன் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

2017ஆம் ஆண்டு ஜிடிபி கணக்கெடுப்பின்படி உருவாக்கப்பட்ட பட்டியலில் இந்தியா 6 வது இடத்தை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்