இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,076 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,95,359 ஆக குறைந்தது. புதிதாக 11 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,150 ஆக உயர்ந்தது.
நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,19,264 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 47,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 2,14,95,36,744 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 17,81,723 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.