சென்னை பெண்ணை கடத்திய விவகாரம்; மதபோதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (08:25 IST)
சென்னை தொழிலதிபரின் மகளை கடத்திய விவகாரத்தில் மதபோதகர் ஜாகிர் நாயக் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபலமான தொழிலதிபர் ஒருவரின் மகள் லண்டனில் படிக்க சென்றுள்ளார். அங்கு படித்து வந்த பெண் கடந்த மே மாதம் 28ம் தேதி மாயமானார். இதுகுறித்து தொழிலதிபர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணை கடத்தியது வங்க தேசத்தை சேர்ந்த மத போதகர் நபீஸ் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை டெல்லி ஐ.என்.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐ.என்.ஏ நடத்தி வரும் விசாரணையில் மாணவியின் நண்பராக நடித்து நபீஸ் அவரை கடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த குற்ற செயலில் தொடர்புடையதாக நபீஸ், அவரது தந்தை செகாவத் உசேன் மற்றும் பிரபல மதபோதகர் ஜாகிர் நாயக் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.என்.ஏ, லண்டன் காவல்துறையின் உதவியை நாட உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்