மேகி நூடுல்ஸ் விவகாரம்: ரூ.640 கோடி இழப்பீடு கோரி மத்திய அரசு வழக்கு

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2015 (04:11 IST)
மேகி நூடுல்ஸ் விவகாரத்தில், நெஸ்லே இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.640 கோடி இழப்பீடு கோரி, மத்திய அரசு வழக்கு தொர்ந்துள்ளது.
 

 
இது குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை நிர்வாகம், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் சார்பில் கூறப்படுவதாவது:-
 
இந்தியாவில், முறையற்ற வணிகம் மற்றும் தவறான விளம்பரம் போன்றவற்றை கையாண்டு, அனுமதிக்கப்பட்டதைவிட அளவைவிட அதிக அளவு வேதிப்பொருள்கள் கலந்த மேகி நூடுல்ûஸ, நெஸ்லே நிறுவனம் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதனால், நுகர்வோரும், நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, நுகர்வோரின் சார்பில், நெஸ்லே நிறுவனத்திடம் ரூ.640 கோடி இழப்பீடு கோரி, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.