ஒரு மகனுக்கு பதிலாக ஐந்து மகள்களைப் பெற்றெடுப்பதா ? எம்.எல்.ஏ சர்ச்சை டுவீட்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (23:06 IST)
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர், நாட்டின் வளர்ச்சியை  மகனாகவும்,  பண மதிப்புழப்பு, ஜி.எஸ்.டி போன்ற மத்திய அரசின் திட்டங்களை மகளாகவும் ஒப்பிட்டு  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரவு தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ  ஜிது பட்வாரி  தனது  டுவிட்டர் பக்கத்தில் , மக்கள் ஒரு மகனை எதிர்ப்பார்கிறார்கள், ஆனல் அவர்களுக்கு கிடைத்தது ஐந்து மகள்கள், இந்த மகள்கல் அனைவரும் பிறந்தனர்., ஆனால் விகாஸ் என்ற மகன் இன்னும் பிறக்கவில்லை என்று பதிட்விட்டிருந்தார்.

இதற்கு பாஜக தரப்பில் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கும் ஒரு கேள்வி எழுப்பியுள்ளனர். அதில்,  ‛ராணி துர்காபாயின் தியாகத்தை நாடு சிறப்பாகக்  கொண்டாடிவரும் நாளில்  மகனுக்கு பதிலாக 5 மகள்கள் பிறந்துள்ளனர் என எம்.எல்.ஏ. பட்வாரி கூறியுள்ளார். மகள்களாக பிறப்பது என்ன குற்றமா? என்று தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏவின் கருத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்