திருப்பதியில் கடும் வெள்ளம்: பக்தர்கள் அவதி!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (22:06 IST)
திருப்பதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏழுமலையான் கோவிலில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் திருப்பதி திருமலை செல்லும் கனமழை பெய்து வருகிறது. அங்கு உள்ள அனுமன் கோவிலில் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது 
 
அதேபோல் திருப்பதி-திருமலை இடையே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது பாதயாத்திரையாக நடந்து செல்வதற்கும் நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
திருப்பதி பொறுத்தவரை இது போன்ற அதிக கன மழையை இதற்கு முன் பார்த்ததில்லை என அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்