மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து...80க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (15:43 IST)
டெல்லி ஜாமியா நகரில் உள்ள மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இன்று திடீரென்று  தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனில் உள்ள ஜாமியா நகரில்  மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்  இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதில், சுமார் 80 வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற  தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் மின்சார வாகனங்கள், மட்டுமின்றி, 10 கார்கள், 2 ஸ்கூட்டிகளும் எரிந்து சாம்பலாயின. இந்த  தீ விபத்திற்கு ஏற்படக் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்