பெண் நிருபரை தகாத வார்த்தையால் திட்டிய எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (18:45 IST)
கார்நாடகாவில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்தெடுக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் குதிரை பேரத்தை பற்றி செய்தி சேகரிக்க சென்ற டைம்ஸ் நவ் பெண் பத்திரிகையாளரை கர்நாடக எம்.எல்.ஏ ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.


 
 
கர்நாடக மக்கள பக்ஷா என்ற பெயரில் கட்சி தொடங்கி, பீதர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆக உள்ளார் அசோக் கெனி. மாநிலங்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 13 சுயேட்சை வேட்பாளர்களை மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்து குதிரை பேரம் நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்த தகவலை அறிந்த டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின், மும்பை பிரிவு தலைமை நிருபர் மேகா பிரசாத், அந்த ஹோட்டலுக்கு சென்று அசோக் கெனியிடம் குதிரை பேரம் குறித்து கேள்வி கேட்டார். அசோக் கெனி பதில் அளிக்காமல் நடக்க தொடங்கினார்.
 
ஆனால் பெண் நிருபர் விடாமல் அவரை பின் தொடர்ந்து மைக்கை நீட்டி திரும்ப திரும்ப குதிரை பேரம் குறித்து கேட்டுக்கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த அசோக் கெனி இந்தியில் அந்த பெண் நிருபரை அசிங்கமான வார்த்தையால் திட்டினார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த மேகா பிரசாத் மும்பை காவல் துறையிடம் புகார் அளித்தார். காவல் துறையினரும் அவரின் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தலைமை எடிட்டர் அருனப் கோஸ்வாமி அசோக் கெனியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்கு அசோக் கெனி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அசோக் கெனி அந்த பெண் நிருபர் தன்னை கேள்வி கேட்டு தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.
 
இதற்கு மறுப்பு தெரிவித்த அருனாப் கோஸ்வாமி நிருபர் மீது தவறு ஏதும் இல்லை, கேள்வி கேட்பதுதான் பத்திரிகையாளரின் வேலை இதற்காக மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை எனவும் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்