அடிச்சாலும் ...புடிச்சாலும்... சரி ! இப்படியும் போட்டி நடக்குமா...?

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (19:15 IST)
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் தேவரகட்டு மலையின் மேலே மாமல்லேஸ்வர சுவாமி கோவிலில் தசரா விழா முடியும் தருவாயில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் விநோத போட்டி நடைபெற்றது.
அப்போது ஒருவரை ஒருவர் தடியால் தக்கிக் கொண்டு ரத்தம் சிந்துகிற வன்னி உற்சவத் திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அப்போது ஒருவருக்கொருவர் பலத்துடன் எதிரில் இருப்பவரை தாக்கில் கொள்ளுவர்.அந்த தடியில் காவலர்கள் கையில் வைத்துள்ள குண்டாந்தடிகளைப் போல இருக்கும்.அப்படி தாக்கப்பட்டதும் வலியால் அலறியும், ரத்தம் சொட்டிக்கொண்டும் நிற்பார்கள். காயம்பட்டவர்கள் உடம்பில் இருந்து வெளியேறும் ரத்தம் கடவுளுக்கு அர்பணிப்பதாக நம்புகிறார்கள்.
 
இந்த விழாவில் தடியடியால் பாதிப்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்