மத்திய அமைச்சரவை விரிவாக்கபட்டது: 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (16:08 IST)
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2-வது முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 19 புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே அமைச்சரவையில் 64 பேர் உள்ளனர். அதிகபட்சமாக 82 அமைச்சர்கள் இருக்கலாம் என்ற நிலையில் புதிய அமைச்சர்கள் 19 பேருக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.   முதலாவதாக பிரகாஷ் ஜவடேகர் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் பகான் சிங் குலஸ்தே, டார்ஜிலிங் எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா, பிஜாபூர் எம்.பி. ரமேஷ் சந்தப்பா ஜிகஜிநாகி, டெல்லி பாஜக தலைவரும் ராஜஸ்தான் மாநில எம்.பி.யுமான விஜய் கோயல், இந்திய குடியரசு கட்சி (என்டிஏ கூட்டணியில் உள்ளது) எம்.பி. பந்து அதாவாலே, அசாம் எம்.பி. ராஜன் கோஹெய்ன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து அனில் மாதவ் தவே, குஜராத் பாஜக தலைவர் பார்சோத்தம் ரூபாலா, மகேந்திரநாத் பாண்டே, உத்தரகாண்ட் எம்.பி. அஜய் டம்டா, ஷாஜன்பூர் எம்.பி. கிருஷ்ணராஜ், மனுஷ் மந்தாவியா, அப்னா தல் தலைவர் அனுப்பிரியா படேல், ராஜஸ்தான் எம்.பி. சி.ஆர்.சவுத்ரி, நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி, துலே எம்.பி. சுபாஷ் பாம்ரே ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அடுத்த கட்டுரையில்