மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்: தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா?

Siva
வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:51 IST)
மத்திய அரசை கண்டித்து  நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், ஊதியம் அதிகம்  கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த போராட்டத்தில் தபால் துறை, தொடர்பு துறை, மின்சார துறை, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகளை உள்ள தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
போக்குவரத்து துறையில் உள்ள 9 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் பிப்ரவரி 16ஆம் தேதி பேருந்து போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்