''பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்''- மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (21:57 IST)
சீனாவில் தற்போது பிஎப்7 என்ற கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் உலக  நாடுகளிடையே இத்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் என்பதால் இந்தியாவில், பொது மக்கள்  கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை  வேண்டும் என்றும் பொதுமக்களை முகக்கவசம் அணிய வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை  செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கொரொனா உறுதியாக மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டு எனவும், இந்தியாவில் உருமாறிய 10 வகை கொரோனா தொற்று இருப்பதால், சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 கொரொனா வகை உள்ளதா என்பதைக் கண்டறிய இது உதவும்.

மேலும், மருத்துவமனையில், போதிய உபகரணங்கள் மற்றும் படுக்கைகள் இருப்பதை  உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்