இந்தியா முழுவதற்கும் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக தேசிய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தியா பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில வாரியாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்றத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறாக அடிக்கடி தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால் ஏற்படும் நிதி சுமையை குறைக்க ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தலாம் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால் இது மாநில சுயாட்சியை குலைக்கும் விதமாக உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஒரே தேர்தலாக நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.