தம்பியை கேலி செய்ததை தட்டிக்கேட்ட அண்ணன் அடித்து கொலை

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (13:22 IST)
பெருங்குடியில் தம்பியை கேலி செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை உருட்டுக்கட்டை மற்றும் பாட்டில்களால் தாக்கி கொலை செய்தனர்.


 

 
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா மற்றும் அவரது சகோதரர்கள் சரவணன், முகுந்தன் ஆகியோர் ஒன்றாக தங்கி சென்னையில் வேலை செய்து வருகின்றனர்.
 
முகுந்தன் வேலைக்கு செல்லும் போது சிலர் அவரை கேலி செய்துள்ளனர். அதில் மனமுடைந்த முகுந்தன் இதுப்பற்றி அவரது அண்ணன் சத்யாவிடம் கூறியுள்ளார். 
 
இதையடுத்து கடந்த 5ஆம் தேதி சத்யா, தனது தம்பியை கேலி செய்த வெங்கடேசனிடம் சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வெங்கடேசன் சத்யாவை சரமாரியாக தக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டர். 
 
பின்னர் வெங்கடேசன், அவரது நண்பர்களுடன் சென்று மீண்டும் சத்யாவை உருட்டுக்கட்டை மற்றும் பாடில்களால் சரமாரியாக தாக்கியுள்ளார், அதை தடுத்த சரவணனையும் தாக்கியுள்ளனர்.
 
அண்ணன் தம்பி இருவரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று இரவு சத்யா சிகிச்சை பல்னின்றி உயிரிழந்தார், சரவணன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை கைது செய்தனர்.   
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
அடுத்த கட்டுரையில்