முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. என்ன காரணம்?

Mahendran
வியாழன், 3 அக்டோபர் 2024 (16:22 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மீது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துடன் தொடர்பான முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் 20 கோடி ரூபாய் நிதியை முறைகேடாக அசாருதீன் கையாண்டதாக தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

61 வயதான அசாருதீன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆக இருந்தவர். அவர் மீது தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பண மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் ஆஜராகி என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்து பார்க்க வேண்டும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்