மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (18:26 IST)
மேற்கு வங்க மாநிலம் கோல்கொட்டா  அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று 75 வயது நோயாளி அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது இறந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் : மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால்தான் நோயாளி இறந்தார் என்று கூறி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
தாக்கப்பட்ட மருத்துவர்கள் இருவரும் தற்போது ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைக் கண்டித்து இளம், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
இதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தார்.ஆனால் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தூண்டுதலால்தான் மருத்துவர்கள் இப்போராட்டம் நடத்துவதாகக் அவர் கூறியதும் மருத்துவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது.
 
இந்நிலையில் தற்போது இந்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
 
முதல்வர் மம்தா  பானர்ஜியுடன் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இனிமேல் மருத்துவர்கள் மேல் தாக்குதல் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்  உறுதிகொடுத்ததால் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுகொண்டனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்