நூதன போராட்ட எதிரொலி: டெல்லியில் 28 தமிழக விவசாயிகள் கைது!!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (15:33 IST)
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 57 நாட்களாக நடத்தி வருகின்றனர்.


 
 
காவிரி மேலாண்மை வாரியம், வங்கிகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவாசயிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
 
டெல்லியில் தமிழக விவசாயிகள் 58 வது நாளான இன்று விவசாயிகளின் கோவணத்தை பிரதமர் மோடி அவிழ்ப்பது போன்று சித்தரித்து போராட்டம் நடத்தினர்.

இதனால், டெல்லி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தவிர மற்ற அங்கிருந்த 28 விவசாயிகளை கைது செய்தனர்.
 
விவசாயிகளை கைது செய்ததற்கான காரணம் எதையும் போலீசார் கூறவில்லை என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்