உலகத்திற்கே முன்னுதாரணமாக விளங்கும் டெல்லி! – அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்!

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (11:36 IST)
இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தில் டெல்லியில் கொடியேற்றி பேசிய முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் சுதந்திர தினத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தில் டெல்லி தலைமை செயலகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால். பிறகு பேசிய அவர் “வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்திலிருந்து தாய்நாடான இந்தியாவை மீட்க தன்னுயிர் நீத்து போராடிய எண்ணற்ற தியாகிகளுக்கும், வீரர்களுக்கும் இந்த நாளில் நமது நன்றியை தெரிவிப்போம். இந்தியா கொரோனா வைரஸால் கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற போராடி வரும் கொரோனா முன்கள வீரர்கள், மருத்துவர்கள், காவலர்கள் அனைவருக்கும் என் மரியாதையை உரியதாக்குகிறேன்.

டெல்லியின் இரண்டு கோடி மக்களின் கடினமான உழைப்பாலும், கட்டுப்பாட்டாலும் கொரோனா டெல்லியில் கட்டுக்குள் வந்துள்ளது. உலகத்திற்கே டெல்லி ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது. பொருளாதாரரீதியாகவும் டெல்லியில் பெட்ரோல் விலையை குறைத்தல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் குறித்து பெருநிறுவனங்களோடு ஆலோசித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

பிறகு சிறந்த செயல்பாடுகளுக்காக காவல்துறையை சேர்ந்த பிரகாஷ் சந்த் ஷர்மா, ஓம் பிரகாஷ், ஸ்ரீபால் தாஸ் சிங், மொஹிந்தர் சிங் மற்றும் ரபேந்திர சிங் ஆகிய காவல்துறை அதிகாரிகளுக்கு மாநில சிறப்பு விருதுகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்