இந்திய தலைவர்கள் மீது தாக்குதல்: குழு அமைத்த தாவூத் இப்ராஹிம்?

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:05 IST)
இந்தியாவின் முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த தாவூத் இப்ராஹிம் குழு அமைத்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் தலைமறைவாக உள்ளார் என்றாலும் அவர் பாகிஸ்தானில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அவரை பிடிக்க இந்தியா தீவிர முயற்சி செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு என்றே சிறப்பு குழு ஒன்றை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் அமைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்தியாவின் முக்கிய தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்