கிரிப்டோ கரன்சி மூலமாக ரூ100 கோடி மோசடி: கும்பல் தலைவன் தலைமறைவு

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (20:46 IST)
கிரிப்டோகரன்சி மூலமாக ரூபாய் 100 கோடி அன்னிய செலவாணி மோசடியில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிமாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதும் கோடிக்கணக்கான மக்கள் இதில் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேரளாவில் கிரிப்டோகரன்சி மூலமாக ரூபாய் 100 கோடி அந்நியச் செலவாணியை மோசடிகளில் ஈடுபட்டதாக 4 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் இந்த கும்பலின் தலைவன் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியேறுகின்றன 
 
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் முக்கிய தகவல்கள் அதில் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்