கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்குமா WHO??

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (09:10 IST)
கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
இதனிடையே மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதி அளித்திருந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடையப்பெறும் நிலையில் இக்கூட்டத்தில் கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்