வாழைப்பழ விவகாரத்தை வைத்து வியாபாரம் செய்யும் நிறுவனங்கள்

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (14:22 IST)
பிரபல நடிகர் ராகுல் போஸ் வாழைப்பழத்திற்காக குரல் கொடுத்தது இந்திய அளவில் மிகப்பெரிய வைரலானது. அதை தொடர்ந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை வைத்து விளம்பரம் செய்து வருகின்றன.

இந்தியாவில் பிரபல நடிகர் ராகுல் போஸ். கமல்ஹாசனின் “விஸ்வரூபம்” படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர். இவர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் வாழைப்பழம் வாங்கி சாப்பிட, அவர்கள் 442 ரூபாய் பில்லை போட, அதை ட்விட்டரில் ராகுல் போஸ் போஸ்ட் போட, மொத்த இந்தியாவுக்கும் அது ட்ரெண்டாய் போனது.

இதுகுறித்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஹோட்டலுக்கு தண்ட தொகையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வாழைப்பழ சம்பவத்தை உலகின் முன்னனி கார்ப்பரேட் நிறுவனங்களான அமேசான், ஓயோ போன்ற நிறுவனங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்துவது இந்த சம்பவத்தை மேலும் வைரலாக்கி இருக்கிறது.

நேச்சர் பாஸ்கெட் என்ற பழ விற்பனை நிறுவனம் வாழைப்பழத்தின் புகைப்படத்தை போட்டு 442 ரூபாய் என்று விலைபோட்டு அதை சிவப்பு கோட்டால் அழித்துவிட்டு கீழே 14 ரூபாய் மட்டுமே என போட்டிருக்கிறார்கள். கூடவே #RahulBoseMoment என்ற ஹேஷ்டேகையும் இணைத்துள்ளனர்.

பீட்ஸா ஹட் “நீங்கள் 442 ரூபாய்க்கு பழம் வாங்குவதை விட சுவைமிக்க பீட்ஸாவை 99 ரூபாய்க்கு வாங்கலாம்” என விளம்பரப்படுத்தியுள்ளது.

ஓயோ 442 ரூபாய்க்கு நல்ல ரூம் கிடைக்கும் என்று, அமேசான் ப்ரைம் மற்றும் அண்ட் ப்ளிக்ஸ் 442 ரூபாய்க்கு குறைந்த விலையில் சப்ஸ்க்ரைப் ப்ளான் என்று ஒரு பட்டியலையும் தந்துள்ளனர்.

இந்த விளம்பரங்களால் கவுண்டமணி வாழைப்பழ விவகாரத்தை விட பெரிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது ராகுல் போஸின் வாழைப்பழ விவகாரம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்