அடுத்த 14 நாட்களில் உச்சம் அடையும் கொரோனா!!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (12:45 IST)
கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாட்களில் அதாவது பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் உச்சம் அடையும் என்று தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,95,43,328 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 3வது அலை அடுத்த 2 வாரங்களில் உச்சம் அடையும் என்று சென்னை ஐஐடி கணித்துள்ளது. 
 
அதாவது கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாட்களில் அதாவது பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் உச்சம் அடையும் என்றும் முன்னதாக பிப்ரவரி 1 முதல் 15 ஆம் தேதிகளுக்கு இடையே கொரோனா 3வது அலை உச்சம் அடையும் என்று கணிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்