வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:12 IST)
கடந்த சில மாதங்களாக வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது நிம்மதியை அளித்துள்ளது .
 
டெல்லியில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.91.50  குறைந்துள்ளது. இதனால் டெல்லியில் வணிக சிலிண்டர் ரூபாய் 1907 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை டெல்லியில் ரூ.899. 50 என விற்பனையாகி வருகிறது.வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை சென்னையில் ரூ.915 50 என்றும் கொல்கத்தாவில் ரூ.926 என்றும் மும்பையில்ரூ. 899. 50 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்