சமூகத்திற்கு எதிராகப் பதிவிடுபவர்களின் விவரம் சேகரிப்பு - காவல்துறை

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (22:52 IST)
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள பலரும்  இதுகுறித்துத் தங்களின் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் மட்டுமின்றி பல்வேறு விவகாரங்களுக்காகவும் கருத்துப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,  சமூக வலைதளத்தில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் எதிராகப் பதிவிடுபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். அவர்களின் பாஸ்போர்ட்  மற்றும் வாகன, நிறுவன உரிமங்கள் பெறும்போது, இந்த விவரங்கள்  குறிப்பிடப்படும் என உத்ரகாண்ட் மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்