மோடி ஒரு ஊழல்வாதி: கேள்விகளை அடுக்கும் சிதம்பரம்!!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (11:33 IST)
நவம்பர் 8ஆம் தேதி அவரச நாடாளுமன்ற கூட்டத்தை முடித்து விட்டு பிரதமர் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பண மதிப்பிழப்பு உத்தரவைப் பிறப்பித்தார். 


 
 
இந்த அறிவிப்புக்கு அனைவர் மத்தியிலும் மாறுப்பட்ட கருத்துக்களைப் பார்க்க முடிந்தது. இது குறித்து முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம், மோடி அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை, 2016 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஊழல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில், பண மதிப்பிழப்பு என்பது யோசனையே இன்றி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை, இது பிரதமர் செய்தது மிகப்பெரிய ஊழல் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் சிதம்பரம் சில கேள்விகளையும் கேட்டுள்ளார்,
 
# இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என மோடி தெரிவித்தார். ஆனால், தற்போது டிஜிட்டல் பொருளாதாரம், பணமில்லா சமுகம் என்ற வகையில் இது மாறியுள்ளது. ஏன் இந்தத் திடீர் மாற்றம்?
 
# எளிதாக 2000 ரூபாய் நோட்டைப் பெற முடியாத நிலையில், வருவாய் துறை செய்யும் சோதனையில் மட்டும் எப்படிப் பல கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் சிக்குகிறது?
 
# மத்திய அரசு பணப் பரிமாற்றத்திற்குத் தேவையான ரூபாய் நோட்டுகள் நாட்டில் உள்ளது எனத் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் நிலையில், வங்கிகளில் ஏன் பணமில்லை?
 
# பண மதிப்பிழப்பு குறித்து லேக்சபாவில் விவாதம் செய்யும் போது மோடி ஏன் வரவில்லை?
 
# உலகின் மிக வலிமையான பொருளாதார அமைப்பைக் கொண்டிருக்கும் நாடுகள் இன்னும் முழுமையான பணமில்லா பொருளாதாரத்தைக் கொண்டு வரவில்லை. இப்படி இருக்கும் நிலையில் முன்னேற்றம் தேவைப்படும் இந்தியாவில் பணமில்லா பொருளாதாரம் தற்போது அவசியமா? என கேட்டுள்ளார்.
 
மேலும், தற்போதைய நிலையைப் பார்க்கும்போது கூடிய விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளைக் கூட மத்திய அரசு செல்லாது என அறிவிக்கலாம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்