பூமியைப் படம் பிடித்து அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (18:00 IST)
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவின் தென் பகுதியை ஆராய சந்திராயன்-2 விண்கலம் சமீபத்தில் செலுத்தப்பட்டது 
 
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஆறாம் தேதி புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இதுவரை 4 முறை நிலை நிறுத்தப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம், தற்போது 90 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. அங்கிருந்து சந்திராயன் விண்கலம் பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ளது. சந்திராயன்-2 அனுப்பிய முதல் புகைப்படங்கள் தற்போடு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
பூமியை சந்திராயன் விண்கலம் நிறைய படங்கள் எடுத்து அனுப்பி இருந்தாலும் அவற்றில் ஐந்து படங்களை மட்டும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த படங்களை  பார்க்க கண் கோடி வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த சந்திராயன் விண்கலம் அடுத்த பத்தாவது நாளில் இன்னும் வேகத்தை அதிகரித்து சந்திரனின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்படும் என்றும், 30ஆவது நாளில் சந்திரனின் நீள்வட்டப்பாதையிலும், 43 வது நாளில் விண்கலத்திலிருந்து லாண்ட்ரி திறக்கப்பட்டு அதில் உள்ள லேண்டர் சந்திரனை நோக்கிச் செலுத்தப்படும் என்றும், நாற்பத்தி எட்டாவது நாளில் லேண்டர் சந்திரனில் தரை இறங்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
அதன்பின்னர் லேண்டரில் உள்ள ஆறு சக்கரங்கள் கொண்ட ரோபோட் கருவி  வெளியே வந்து சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும் என்றும், அந்த ரோபோட், சந்திரனில் சுமார் 500 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், அப்போது இந்த ரோபோர்ட் மூலம் கிடைக்கும் தகவலை இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்நோக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்