ஏற்றுமதி செய்த ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

புதன், 21 ஏப்ரல் 2021 (13:04 IST)
இந்தியாவில் கொரனோ நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 
இந்த நிலையில் ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டும் என நேற்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆக்சிஜனை ஏற்றுமதி செய்த மத்திய அரசு தற்போது இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது 
 
வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக டெண்டர் விடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து ஆக்சிஜனை பாதுகாப்பாக வைத்திருத்திருக்காமல், கையிலிருந்த ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு தற்போது மத்திய அரசு ஆக்சிஜனை இறக்குமதி செய்த திட்டமிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்