இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல பசுமை வழிதடத்தில் “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” என்ற சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விசாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆக்ஸிஜனை கால தாமதமின்றி கொண்டு சேர்க்க முடியும் என கூறப்படுகிறது.