இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (20:17 IST)
நாட்டு மக்கள் அனைவரும் ஆதார் அடையாள அட்டை வழங்கியதை போன்று மாடுகளுக்கும் ஆதார் அடையாள எண் வழங்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.


 

 
நாட்டு மக்கள் மத்திய அரசின் நல திட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்க கூடாது என உச்ச நீதிமன்றம் பல முறை மத்திய அரசுக்கு தெரிவித்தது. இருந்து மத்திய அரசு தொடர்ந்து அனைத்து சேவைகளிலும் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது மாடுகளுக்கும் ஆதார் எண் வழங்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு,
 
இதன்மூலம் மாடுகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி வழங்க முடியும். பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், பால் உற்பத்தியை கண்காணிக்கவும் முடியும், என தெரிவித்தது.
 
இதையடுத்து 12 இலக்க அடையாள எண்ணை உருவாக்க கால்நடை வளர்பு துறை வல்லுநர்களை நியமித்துள்ளது. இந்த 12 இலக்க அடையாள எண் மாடுகளின் காது மடல்களில் ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டில் சுமார் 88 மில்லியன் மாடுகளுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளதாம்.
அடுத்த கட்டுரையில்