காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (17:03 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக ஆணை பிறப்பித்துள்ளது.


 
 
தமிழக அரசின் மற்றும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட தற்போது நிறைவேறியுள்ளது.
 
கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது என்ற கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் போதே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
மேலும், தமிழகத்திற்கு நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் வரும் 27-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
 
இந்த காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்