ஜம்மு காஷ்மீரில், பள்ளிக்குழந்தைகள் சுற்றுலா சென்ற பேருந்து பள்ளாத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 40 குழந்தைகளுக்கும் மேல் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஒரு தனியார் பள்ளி, அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை சுற்றுலா அழைத்து சென்றது. அந்த பேருந்து மஞ்சகோட்டி என்ற இடத்திலிருந்து பீர் கி காலி எனும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, மான்சார் என்ற இடத்தில், சாலையிலிருந்து விலகி, அருகிலிருந்து பள்ளதாக்கில் கவிழ்ந்தது.
இதில் அதில் பயணம் செய்த குழந்தைகளில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.