ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ரஷ்ய மொழியில் இருந்ததால் அதிர்ச்சி..!

Mahendran
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (12:02 IST)
இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அந்த மிரட்டல் ரஷ்ய மொழியில் இருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு  திடீரென மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த மின்னஞ்சல் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டதாக தெரியவந்தது.

இதனை அடுத்து, ரஷ்ய மொழியை மொழிபெயர்த்து பார்த்தபோது அதில் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

ஏற்கனவே, நவம்பர் 16ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் லஷ்கர்-இ-தொய்பா என்ற அமைப்பின் நிர்வாக அதிகாரி பேசுவதாக கூறி, ரிசர்வ் வங்கியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் வங்கி முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அது வெறும் மிரட்டல் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்தவிதமான ஆபத்தான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்