சொந்த கட்சியை காப்பாத்த முடியாதவங்க குறை சொல்லலாமா? – ராகுல்காந்தி மீது பாஜக விமர்சனம்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:06 IST)
பாஜக சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதாக ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிராக ராகுல் காந்தி மீது பாஜகவினர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் ட்விட்டரில் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை பக்கங்கள் சிலவற்றை பகிர்ந்த ராகுல் காந்தி பாஜக இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதாகவும், அதன்மூலம் பொய் செய்திகளையும், வெறுப்புணர்வையும் மக்களிடையே பரப்புவதாக கூறியிருந்தார். ராகுலின் இந்த குற்றச்சாட்டிற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பதிலடி அளிக்கும் வகியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ”தனது சொந்த கட்சியை சரியாக காப்பாற்ற முடியாதவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உலகத்தை கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர். கேபிரிட்ஜ் அனலிடிகா மற்றும் பேஸ்புக் உடன் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முன்பாக தகவல் திருட்டில் ஈடுபட்ட நீங்கள் எங்களை கேள்வி கேட்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்