காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் நாக்கை வெட்டினால் ரூ.10 லட்சம் பரிசு: பாஜக பிரமுகர் அறிவிப்பு!!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (15:01 IST)
மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கஜ்ராஜ் ஜாதவ், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மீர்வைசின் நாக்கை துண்டிப்பவருக்கு பரிசு அறிவித்துள்ளார். 


 
 
சாம்பியன் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. அதற்காக பாகிஸ்தான் அணிக்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மீர்வைஸ் உமர் பாரூக் வாழ்த்து தெரிவித்தார். 
 
இந்நிலையில், மீர்வைசின் செயல்கள், எனது உணர்வுகளை புண்படுத்தி விட்டது. ஆகவே, அவரது நாக்கை துண்டிப்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்