இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிப்பறை அமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 100 மணி நேரத்தில் 10,449 கழிப்பறைகள் கட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டின மாவட்ட நிர்வாகம் இந்திய அளவில் சாதனை செய்தது.
தற்போது இந்த சாதனையை பீகார் மாநிலம் முறியடித்துள்ளது. ஆம், பீகார் மாநிலத்தில் உள்ள கோபல்கஞ்ச் என்ற மாவட்டத்தில் 100 மணி நேரத்தில் மொத்தம் 11,244 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்ட நிர்வாகிகளின் அதிரடி முயற்சியால் இந்த சாதனை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கோபல்கஞ்ச் மாவட்ட நீதிபதி ராகுல்குமார் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துள்ளார்.
மேலும் கோபல்கஞ்ச் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்த 11,244 கழிப்பறைகளும் உடனடியாக அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது