இன்று பாரத் பந்த் : வானகங்கள், லாரிகள் ஓடாது; வங்கி சேவை பாதிப்பு : பாதிக்குமா தமிழகம்?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (09:36 IST)
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன.


 

 
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த வேலை நிறுத்தத்தில்,  இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பணிகளில் உள்ள 15 கோடி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிகிறது..
 
போக்குவரத்து ஊழியர்களில் சுமார் 65 சதவீதம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கி பணிகளும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏடி.எம், தபால் துறை பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர் சங்கம் மற்றும் வருவாய் துறை சங்கம் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால் தாசில்தார், கலெக்டர் அலுவலக்ம் உட்பட அரசு துறை அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஆட்டோ, லாரிகள் போக்குவரத்தும் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்